ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெறுவதற்கான அனைத்து விதிமுறைகளுக்கும் இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் அடுத்த 10 வருடத்திற்கான புதிய விதிமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் முன்வைத்துள்ளது.
அடுத்த ஆண்டு புதிய நன்மைகள் நடைமுறைக்கு வரும் அதேவேளையில், தற்போது இலங்கை போன்று குறித்த சலுகைகளைப் பெறும் நாடுகளுக்கு இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சலுகைகளுக்கு மீண்டும் விண்ணப்பிக்கவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்த பலன்கள் தொடர்ந்து பெறப்படும் என்றும் இலங்கை அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் இந்த இறுதி மதிப்பாய்வு அறிக்கையை அடுத்த மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றில் சர்வதேச தரத்துடன் தொடர்புடைய 27 உடன்படிக்கைகளுக்கு இலங்கை வழங்கிய இணக்கம் இதில் வெளியிடப்படும்.
ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையின் ஒழுங்குமுறையின் கீழ் 27 உடன்படிக்கைகளுக்கு வழங்கிய உறுதி மொழிகளை செயற்படுத்துவதை இலங்கை அரசாங்கம் நிரூபிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.