கெர்சன் நகருக்கு அருகே தமது கட்டுப்பாட்டில் உள்ள நீர்த்தேக்க அணையில் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் கூறியுள்ளது.
அணையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் 18 மில்லியன் கன மீட்டர் நீர் வெளியேறிவருகிறது எனவும், இதனால் கரையோரத்தில் உள்ள ஆயிரகணக்கான மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆற்றின் வலது கரையில் உள்ள 10 கிராமங்கள் மற்றும் நகரங்களில் வசிப்பவர்களை வெளியேற அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது என்றும் உக்ரைனின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான ஜபோரியாவில் அமைந்துள்ள அணுமின் நிலையத்திற்கு இந்த நீர்த்தேக்கதில் இருந்தே குளிரூட்டுவதற்கு தேவையான நீர் வழங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.
இதற்குரிய நீர் வழங்கப்படாவிட்டால் அணுமின் நிலையம் பாதிக்கபடும் என உக்ரைன் கூறியுள்ள போதும் அணுமின் நிலையத்திற்கு ஆபத்து இல்லை என சர்வதேச அணு சக்தி கூட்டமைப்பு அறிவித்துள்ளது.