இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆசிய திறைசேரி திணைக்களத்தின் பிரதி உதவி செயலாளர் ரொபேர்ட் கப்ரோத் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது, இலங்கைக்கான அமெரிக்காவின் நீண்டகால ஆதரவை அவர்கள் மீண்டும் வலியுறுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஒரு நிலையான மற்றும் வளமான நாடு என்ற பகிரப்பட்ட பார்வையை அடைய இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பையும் தூதுக்குழு வலியுறுத்தியுள்ளது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கும் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.














