அவுஸ்ரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இன்று இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
நாளை தொடங்கும் போட்டியில் வெற்றி பெறும் அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் சிலர் கூறிய கணிப்புகள் மீதுதான் தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.
ரிக்கி பொண்டிங், ரவி சாஸ்திரி, வசிம் அக்ரம், இயன் பெல், ரோஸ் டெய்லர் ஆகியோர் இறுதிப் போட்டியை வெல்லும் அணிகள் குறித்து தமது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதன்படி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பை அவுஸ்ரேலியா வெல்வதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக அவ்வணியின் முன்னாள் தலைவர் ரிக்கி பொண்டிங்கும் பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசிம் அக்ரம், நியூசிலாந்தின் முன்னாள் வீரர் ரோஸ் டெய்லர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
எனினும், போட்டியில் முன்னோக்கி வரும் அணிக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என இந்திய முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கணித்துள்ளார், மேலும் பந்தை நன்றாக அடிக்கும் அணிக்கு போட்டியில் அதிக நன்மைகள் கிடைக்கும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் பெல் தெரிவித்துள்ளார்.