நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துளதாக நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கை ஒன்றினை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போதைய நீர் கட்டண அறவீடுகளின் படி ஒவ்வொரு மாதமும் 425 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்படுவதாகவும் இதனை தொடர்ந்தும் எதிர்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தளவு பாரிய நிதி இருக்குமானால் பல்வேறு கஷ்டங்களுக்கு உள்ளாகியிருக்கும் மலையக மக்களின் தேவைகளுக்கு உபயோகப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
நீர் கட்டணம் அதிஅக்ரிதலும் அதில் சமுர்த்தி பயனாளிகள் மற்றும் அரசாங்கத்தின் நலன் புரி திட்டங்களுக்கு உட்பட்டோருக்கு விலக்கு அளிக்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் கடந்த 3மாதங்களாக ஆராய்ந்து வருவதாகவும் பாவனையாளர்களில் 20 சதவீதமானவர்களே இந்த கட்டண அதிகரிப்பை எதிர்கொள்வார்கள் என்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.