உள்ளூராட்சித் தேர்தலுக்காக கோரப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இவ்விடயம் விரிவாக ஆராயப்பட்டது.
தற்போது உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறுவதற்கான அறிகுறியே இல்லாததால், வேட்புமனுக்களை இரத்து செய்துவிட்டு, வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மீண்டும் தேர்தலை நடத்துவது நல்லது என இதன்போது ஆலோசனை விடுக்கப்பட்டது.
இதன்படி, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானம் எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8,711 வேட்பாளர்களை தெரிவுசெய்வதற்காக வேட்புமனுக்கள் கோரப்பட்டு, 80 ஆயிரத்து 672 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.