அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான மூன்றாம் கட்டப் பாடசாலை நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகியுள்ள.
அக்.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்காக கடந்த மாதம் 26 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.
இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி வரை பாடசாலை மாணவர்களுக்கான பருவச் சீட்டுகள் வழங்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அதேநேரம் 16ம் திகதி வரை ரயில் சீசன் டிக்கெட்டுகளை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாடசாலைகள் ஆரம்பமானதுடன் டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் அறிவித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு உடலில் பொருத்தமான நுளம்பு விரட்டியை தடவி பாடசாலைக்கு அனுப்புமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் டெங்கு நோயிலிருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாக்க முடியும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார்.
இந்த வருடத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 961 ஆகும், இதில் 25 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.