புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு பணம் அனுப்புவது அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த மே மாதம் 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இவ்வருடத்தின் கடந்த மே மாதம் வரை வௌிநாட்டு தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.