சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கைகளை அடுத்த மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட 62 ஒப்பந்தங்களில் 25 மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அதன் முன்னேற்றம் குறித்து ஆராய, இது தொடர்பாக, மத்திய வங்கியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என்றும் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுடன் செயல்திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், தற்போது அது முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்திற்குள் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்துடன் தொடர்புடைய இலக்குகளை அடைவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.