ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெறவுள்ள அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டத்தில் பங்கேற்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியின் அறிவித்தலின் பிரகாரம், பிரதமரால் அழைக்கப்பட்ட இந்த சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இதன்படி இன்றைய கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் சாகர காரியவசம் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுமுன்தினம் இதேபோன்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட உறுப்பினர்கள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றவில்லை.
பொதுஜன பெரமுனவுக்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் வழங்கப்படாமல் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் மற்றும் ஏனையவர்கள் அரசாங்க தரப்பிலிருந்து தனித்தனியாக அழைக்கப்பட்டமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டது.