பெற்றோரின் துன்புறுத்தல்களுக்கு உள்ளான அநுராதபுரத்தைச் சேர்ந்த, 15 வயதான சிறுவன் ஒருவன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்று ஹட்டன் புகையிர நிலையத்தில் சுற்றித் திரிந்த நிலையில் நேற்றுக் காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளான்.
பெற்றோர் தன்னைக் கடுமையாகத் தாக்குவதாகவும், தன்னைப் பாடசாலைக்குச் செல்லவிடாமல் தடுப்பதாகவும், அவர்களது துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்கவே இவ்வாறு வீட்டை விட்டு வெளியேறியதாகவும், பாணந்துறையில் உள்ள பாட்டியின் வீட்டுக்குச் செல்ல நினைத்துத் தவறான புகையிரதத்தில் ஏறியதாகவும், பின்னர் ஹட்டன் புகையிரதத்தில் இறங்கியதாகவும், அச்சிறுவன் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளான்.
மேலும் தனக்கு ஒரு சகோதரனும் மூத்த சகோதரியும் இருப்பதாகவும் அவர்கள் அனுராதபுரத்தில் வசித்து வருவதாகவும் ,தான் பாணந்துறையில் உள்ள பாட்டியுடன் தங்கி பாடசாலை சென்று வந்ததாகவும் பின்னர் தரம் 10 இல் கல்வி கற்கும் போது பெற்றோரால் பாடசாலையில் இருந்து விலக்கப்பட்டதாகவும், தான் மீண்டும் பெற்றோருடன் வாழப்போவதில்லை எனவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளான்.
அதுமட்டுமல்லாமல் தான் மீண்டும் பெற்றோருடன் வாழப்போவதில்லை எனவும் அச்சிறுவன் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சிறுவனின் உடலில் கடுமையாகத் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முதுகுப் பகுதியில் இடுப்புப் பட்டியால் தாக்கப்பட்டமைக்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.