பிலிப்பைன்ஸில் போராட்டத்தில் ஈடுபட்ட 7 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் பாங்கமோரோ என்னும் இயக்கத்தவர்களுக்கான முழுமையான அங்கீகாரத்தை வழங்குமாறு கோரி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து ஒழிக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த நிலையில் போராட்டங்களை கட்டுப்படுத்தும் வகையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பாங்கமோரோ இயக்கத்தை சேர்ந்து 7 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.