உடற்பருமன் என்பது வயது வித்தியசமின்றி உலகம் முழுவதும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது.
உடற்பருமனைக் குறைக்க பல்வேறு மாத்திரைகள் இருந்தாலும், பெரும்பாலான சிகிச்சைக்கு ஊசி வழி மருந்துகளே பரிந்துரைக்கப்படுகிறன.
இவை சிகிச்சையைப் பெற்றுக் கொள்பவர்களுக்கு மிகுந்த வலியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் உடல் பருமனைக் குறைக்க வெகோவி” (Wegovy) என்ற வீரியம் மிக்க மாத்திரையொன்றை டென்மார்க்கைச் சேர்ந்த நோவோ நோர்டிஸ்க் என்ற நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
“ஜி.எல்.பி.-1 அகனிஸ்ட்” எனப்படும் ஒரு புதிய மருந்து வகையில், “ஸெமாக்ளூடைட்” எனும் மூலப்பொருள் கொண்டு குறித்த மாத்திரை தயாரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, இது ஊசி வடிவில் கிடைத்தாலும், மாத்திரை வடிவில் கொண்டு வர பல தரக்கட்டுப்பாட்டுச் சோதனைகள் மற்றும் ஆய்வுகளை இந்நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
இந்த சோதனைகளில், ஊசி மருந்து போலவே இந்த மாத்திரை வேலை செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மாத்திரைக்கு ஒப்புதல் அளிக்கும்படி இந்த ஆண்டின் பிற்பகுதியில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் விண்ணப்பிக்க மருந்து தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளத.அ
மேலும் நீரிழிவு நோயினால் அவதிப்படும் பலருக்கும் உடல் பருமன் குறைப்பில் இந்த மருந்து பலனளிக்கலாம் என ஆய்வுகள் தெரிவிப்பதாகவும், இது அந்நோயினால் அவதிப்படுவோருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் எனவும் கூறப்படுகின்றது.
“வெகோவி” மாத்திரைகளின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை என “நோவோ நோர்டிஸ்க்” நிறுவனம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் எலி லில்லி (Eli Lilly), ஃபைசர் (Pfizer) போன்ற மேலும் பல முன்னணி மருந்து நிறுவனங்களும் இது போன்ற “வாய் வழி உட்கொள்ளும் மருந்து” (oral drug) தயாரிக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.