தமது முறையற்ற காதல் விவகாரம் அம்பலமானதால் சிங்கப்பூர் நாடாளுமன்ற சபாநாயகரும் பெண் எம்.பி ஒருவரும் பதவியை இராஜினாமா செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகர் டான் சுவான் ஜின் மற்றும் செங்லி ஹுய் என்ற எம்.பியுமே இவ்வாறு தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் கையளித்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர் லீ சியென் லூங் “மக்கள் செயல் கட்சியின் உயர்ந்த தகுதி மற்றும் தனிப்பட்ட நடத்தையை பேணுவதற்காக சபாநாயகர் மற்றும் எம்.பி.யின் இராஜினாமா ஏற்று கொள்ளப்பட்டுள்ளது. அவர்கள் தகாத உறவில் இருந்தனர். அதை கடந்த பெப்ரவரி மாதம் நிறுத்த சொன்ன பிறகும் அது தொடர்ந்தது. இவ் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு சபாநாயகரிடம் கூறினேன். ஆனால் அது தொடர்ந்தபடியே இருந்தது. இதனால் அவர்களது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன் “என்றார்.