அல்சைமர் நோய்க்கான சிகிச்சையாக அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று டொனனெமாப் என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது.
அல்சைமர் நோய் படிப்படியாக மனித நினைவாற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து பயன்பாடு சுமார் 60 சதவிகிதம் மெதுவாக்கும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
நோயின் ஆரம்ப கட்டத்தில் மூளையில் படிந்திருக்கும் புரதத்தை இந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் அகற்ற முடியும் என்பதும் தெரியவந்துள்ளது.
ஆனால், மரபணு காரணங்களால் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு பக்கவிளைவாக மூளை வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மற்ற பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.