பிரிமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவினால் குறைத்துள்ள நிலையில், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை மீண்டும் குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையை 25 ரூபாவினால் குறைப்பதாக கோதுமை மா நிறுவனங்கள் தமது சங்கத்திற்கு உறுதியளித்திருந்ததாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு வாக்குறுதி அளித்து ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார