கல்முனை பிரதேச செயலகக் கணக்காளராக இலங்கை கணக்காளர் சேவையில் முதலாம் தர உத்தியோகத்தரான சம்மாந்துறையைச் சேர்ந்த கே.எம்.எஸ் அமீர் அலி இன்று(19) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.
சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இலங்கை கணக்காளர் சேவையில் 1997ஆம் ஆண்டு உள்ளீர்க்கப்பட்டு கணக்காய்வாளர் திணைக்களத்தில் கணக்காய்வு பரீட்சகராகக் கடமையாற்றினார்.
பின்னர் 2008ஆம் ஆண்டு தமன பிரதேச செயலகத்தில் கணக்காளராகவும், 2009ம் ஆண்டு அம்பாறை கச்சேரியில் கணக்காய்வு அத்தியட்சகராகவும், 2013 ஆம் ஆண்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கணக்காளராகவும் 2020ஆம் ஆண்டு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் கணக்காளராகக் கடமையாற்றியதோடு தற்போது கல்முனை பிரதேச செயலகத்தில் கணக்காளராகக் கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.
இக்கடமையேற்கும் நிகழ்வில் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி,கணக்காளர் யூ.எல் ஜவாஹீர்,நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளர் கே.றிஸ்வி யஹ்சர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலீஹ், அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.