திருகோணமலை நீதிமன்ற வீதியைச் சேர்ந்த 17 வயதுடைய எம்.எல்.எம்.எம். முன்சித் என்ற பாடசாலை மாணவன் நேற்று (26) காலை முதல் காணாமல் போயுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திருகோணமலை பகுதியில் பிரபல வழக்கறிஞரின் மகனான குறித்த இளைஞன் நேற்று காலை வீட்டை விட்டு வெளியேறியிருந்ததுடன் மாணவர் பாடசாலைக்குச் சென்றுவிட்டதாக வீட்டார் நினைத்திருந்த நிலையில் குறித்த மாணவர் மாலை வரை வீடு திரும்பவில்லை.
இதை அடுத்து குறித்த மாணவர் திருகோணமலையில் உள்ள கோணேஷ்வரா இந்து கல்லூரியில் கல்விகற்பதுடன் அன்றைய தினம் நடைபெற்ற தேர்வில் மாணவர் சமூகமளிக்காதது குறித்து விசாரித்த பின்னர் பாடசாலை நிர்வாகம் காணாமல் போனதாக புகார் அளித்துள்ளது.
இந்து கல்லூரி மைதானத்திற்கு வெளியே உள்ள சமுத்திரகம கிராமத்திற்கு முன்னால் உள்ள பற்றைக்காட்டில் மாணவனின் சைக்கிள் மற்றும் புத்தகங்களுடன் கூடிய பையை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
குறித்த மாணவர் குறித்து இதுவரை தகவல் கிடைக்காத நிலையில் மாணவன் குறித்த தகவல் தெரிந்தால் திருகோணமலை காவல்துறைக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.














