புதிய தொழில் முதலீடுகள், அமைச்சர்கள் மீதான அமுலாக்கத் துறை நடவடிக்கை, அரசியல் சூழல் குறித்து தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் இதன்போது தெரவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அண்மைக்காலத்தில் தழிழக முதலமைச்சர் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த நிலையில் தொழில் முனனேற்றங்கள் குறித்து பல்வேறு தரப்பினருடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் 15 ஆம் திகதி தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயற்படுத்தவுள்ளதாகவும் இதற்கான பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.