அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படை தளபதி Michael M. Gilday வின் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தளபதியாக Lisa Franchetti வை அமெரிக்கா ஜனாதிபதி Joe Biden நியமித்துள்ளார்.
குறித்த நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப்படும் பட்சத்தில் அமெரிக்க இராணுவ தளபதியாக பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையை Lisa Franchetti பெறுவார் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை அமெரிக்காவின் 32 ஆவது கடற்படைத் தளபதியாக Michael M. Gilday 2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 22 ஆம் திகதி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.