மஹரகம அஸ்திய வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக கடவத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மண்டாவல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் குழுவுடன் சுற்றுலாவிற்கு சென்றிருந்த வேளையில் மேல் பியன்வில கடவத்த பிரதேசத்தில் உள்ள நீச்சல் தடாகத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.














