அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதனையடுத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.