லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் ஐந்தாவது லீக் போட்டியில், காலி டைடன்ஸ் அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
கொழும்பு-ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், காலி டைடன்ஸ் மற்றும் பி-லவ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காலி டைடன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய காலி டைடன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக டிம் செய்பர்ட் 74 ஓட்டங்களையும் சகிப் அல் ஹசன் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அதேபோலகாலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில் ஆமிர் ஜமால், மொஹமட் ஹஸ்னெய்ன், வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 181 என்ற கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பி-லவ் அணி, 17.1 ஓவர்கள் நிறைவில் 97 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் காலி டைடன்ஸ் அணி 83 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அஷேன் பண்டரா 27 ஓட்டங்களையும் இசுரு உதான 16 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், கசுன் ராஜித, காரவா, டப்ரைஸ் சம்சி மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் லஹிரு சமரகோன் மற்றும் அகில தனஞ்சய ஆபியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 39 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 5 பவுண்ரிகள் அடங்களாக 74 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட டிம் செய்பர்ட் தெரிவுசெய்யப்பட்டார்.