பாகிஸ்தான் நாடாளுமன்றம் எதிர்வரும் 9ஆம் திகதி கலைக்கப்படும் என பிரதமர் Shehbaz Sharif தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களை கௌரவிக்கும் வகையில் நடைபெற்ற இரவு விருந்தில் அவர் நாடாளுமன்றத் தலைவர்களைச் சந்தித்த பின்னர், நாட்டின் அரசியல் நிலவரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதை அடுத்தே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அத்துடன் , தற்காலிகப் பிரதமருக்கான ஏற்பாடுகள் மற்றும் தற்காலிக அரசாங்கத்தை அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக The Express Tribune தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 9ஆம் திகதி பிரதமர் ளூநாடியண ளூயசகை தேசிய சட்டமன்றத்தை கலைப்பதற்கான முறையான ஆலோசனையை ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பார் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அரசியலமைப்பு விதிகளின்படி, கலைப்பை நடைமுறைப்படுத்துவதற்கு 48 மணி நேரத்திற்குள் ஜனாதிபதி ஆலோசனையில் கையெழுத்திட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அந்த ஆலோசனையில் குடியரசுத் தலைவர் கையெழுத்திடவில்லை என்றால், பேரவை தானாகவே கலைக்கப்படும் என்று The Express Tribune செய்தி வெளியிட்டுள்ளது.