இந்த வருடம் பதினைந்தாவது International Documentary & Short Film Festival of Keralaவில், ஐம்பத்தி மூன்று குறும்படங்கள் தெரிவுசெய்யபட்டுள்ளன. அதில் அமெரிக்கா, ஈரான், சீனா, இஸ்ரேல், ஹங்கேரி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சில நாடுகளின் படங்களுடன், இலங்கை சார்பாக “எல்லையற்று விரிகிறதோர் இரவு” தெரிவாகியுள்ளது.
இக் குறும்படத்தை முல்லைத்தீவு, முள்ளியவளையில் வசிக்கும் வேல்ராஜா சோபன் என்பவர் எழுதி தயாரித்து இயக்கியுள்ளார். இந்த குறும்படம் சிறிய பொருட்செலவுடன், நண்பர்களின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் எடுக்கபட்டது. (04.08.2023) கேரளாவில் உள்ள KAIRALI SREE NILA திரையங்கில், காலை பதினோறு மணிக்கு(11.00 AM) International Documentary & Short Film Festival of Kerala சார்பில் திரையிடப்பட இருக்கிறது.
இந்த குறும்படம் வேலை முடிந்து இரவில் கணவனுக்காக வீதியில் காத்திருக்கும் ஒரு பெண்ணுக்கு நடக்கும் Mental Rape பற்றியது.
இந்த குறும்படத்தில் இராசையா லோகாநந்தன், செல்வராஜ் லீலாவதி மற்றும் ஜெனோஷன் ஜெயரட்ணம் முதன்மை காதாபாத்திரங்களாக நடித்து இருக்கிறார்கள். ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பு மற்றும் உதவி ஒளிப்பதிவாளராக திலீப் லோகநாதனும், உதவி இயக்குனர் மற்றும் Co – Writerறாக புவனேஷ்வரன் பிரஷாந்த என்பவரும், இரண்டாவது உதவி இயக்குனாராக Rj பெனயா என்பவரும், கள உதவியாளராக காந்தரூபன் மற்றும் கிரிஷாந் என்பவரும், Foley & Sound Mix புவனேந்திரன் பிரணவனும் கள ஒலிப்பதிவை வாகீசனும் செய்திருக்கிறார்கள்.