“உலக சந்தையில் எரிவாயுவின் விலை எவ்வளவு அதிகரித்தாலும், லிட்ரோ நிறுவனம் 5 சதத்தைக்கூட உயர்த்தாது” என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன் ” இந்த வருடத்தில் உலக சந்தையில் மிகவும் குறைந்த விலையில் எரிவாயு கிடைத்த மாதமாக கடந்த மாதம் காணப்படுகிறது. நாம் இதுதொடர்பாக ஏற்கனவே ஆராய்ந்து, கடந்த மாதமே 8000 டொன்னுக்கும் அதிகமான எரிவாயுவை கொள்வனவு செய்துவிட்டோம். நாம் நினைத்ததுபோலவே, இம்மாதம் 85 டொலர் அளவில் எரிவாயுவின் விலை உலக சந்தையில் அதிகரித்துள்ளது.
ஆனால், நாம் கடந்த மாத விலைச் சுட்டெண்ணுக்கு இணங்கவே, எரிவாயுவை கொள்வனவு செய்துள்ளமையால் எரிவாயு சிலிண்டர்களின் விலையை உயர்த்த வேண்டிய தேவைக் கிடையாது. உலக சந்தையில் எரிவாயுவின் விலை எவ்வளவு உயர்ந்தாலும், நாம் எரிவாயு சிலிண்டரின் விலையை உயர்த்தப்போவதில்லை ” எனவும் லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.