மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வுக்கான முதல் மாத்திரையை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
இது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை தினசரி மாத்திரையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தற்போது வரை, மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வுக்கான சிகிச்சை ஊசி மருந்து மூலம் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மாத்திரை இந்த ஆண்டின் இறுதியில் சந்தைக்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மனச்சோர்வின் மற்ற வடிவங்களைப் போலவே, மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வின் அறிகுறிகளில் சோகம், ஆற்றல் இழப்பு, உயிர்மாய்ப்பு எண்ணங்கள், இன்பத்தை உணரும் திறன் குறைதல் அல்லது அறிவாற்றல் குறைபாடு ஆகியவை அடங்கும் என்று உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கூறுகிறது.
அமெரிக்காவில் ஏழு பெண்களில் ஒருவர் மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வுக்கான அறிகுறிகளை அனுபவிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மூன்று நாட்களுக்குள் மனச்சோர்வு அறிகுறிகளைக் கணிசமாகக் குறைக்க குறித்த மாத்திரை உதவியுள்ளதாக மருத்துவ பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.