லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரின் 12ஆவது லீக் போட்டியில், 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இது அந்த அணியின் சொந்த மைதானத்தில் தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியாகும்.
கண்டி பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அணி முதலில் காலி டைடன்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்துள்ளது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பி-லவ் கண்டி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 203 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக வனிந்து ஹசரங்க 64 ஓட்டங்களையும் பகர் சமான் 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், லஹிரு சமரகோன் 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித, நகராவா மற்றும் சம்ஸி ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 204 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, பதிலுக்கு களமிறங்கிய காலி டைடன்ஸ் அணி, 16.4 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் கண்டி அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
1.4 ஓவரில் ஷெவோன் டேனியல் ஓட்டங்கள் எதுவும் பெறாமலும் 3.3 ஓவர்களில் பானுக ராஜபக்ஷ் 5 ஓட்டங்களுடனும் 4.2 ஓவரில் டிம் சீஃபர்ட் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனை தொடர்ந்து அணியின் ஊட்ட எண்ணிக்கை 40 ஆக இருக்கும் போது லசித் குரூஸ்புல்லே 27 ஓட்டங்களுடனும் தசுன் சான ஒரு ஓட்டத்துடனும் ஷகிப் அல் ஹசன் 11 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து லஹிரு சமரகோன் மற்றும் அஷான் பிரியஞ்சன் ஆகியோர் 16 ஆவது ஓவரில் ஆட்டமிழக்க தப்ரைஸ் ஷம்சி16.3 ஆவது பணத்திலும் 16.4 ரிச்சர்ட் ங்கராவா 16.4 ஆவது பணத்திலும் ஆட்டமிழந்தனர்.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, லஹிரு சமரகோன் 36 ஓட்டங்களையும் கிருஸ்புள்ளே ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பி-லவ் கண்டி அணியின் பந்துவீச்சில், வனிந்து ஹசரங்க 4 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும் முஜிப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும் துஸ்மந்த 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக வனிந்து ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.