சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் ஏவுகணை படையின் மறுசீரமைப்பு, ‘அணு முக்கோணம்’ என்று அழைக்கப்படுவதை நோக்கிய மாற்றத்தை நோக்கி நகருகிறது.
இது நிலம், வான், கடலில் இருந்து அணு ஏவுகணைகளை ஏவ அனுமதிக்கும் மூன்று முனைய ஒருங்கிணைந்த கட்டளை அமைப்பினை கொண்டதாக வொய்ஸ் ஒப் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 2016இல் அமெரிக்காவிற்கு தப்பிச் சென்ற முன்னாள் சீன கடற்படை அதிகாரி யாவ் செங், பலர் ஜியின் போரை எதிர்த்துப் போராட விரும்பவில்லை என்றார்.
சீனாவின் அணுவாயுதத் தடுப்பை அதிக சக்தி வாய்ந்ததாக மாற்றும் என்றும், அமெரிக்காவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை அதிகரிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம், இந்த வாரம், மக்கள் விடுதலை இராணுவத்தின் வழக்கமான மற்றும் அணுசக்தி ஏவுகணைகளுக்குப் பொறுப்பான உயரடுக்கு படையின் இரண்டு தலைவர்கள் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கால் மாற்றப்பட்டடுள்ளனர்.
முன்னாள் துணை கடற்படைத் தளபதி வாங் ஹூபின் மற்றும் விமானப்படையின் தெற்கு கட்டளையின் முன்னாள் அரசியல் ஆணையர் சூ ஜிஷெங் ஆகியோரை முறையே ஏவுகணை படையின் தளபதி மற்றும் அரசியல் ஆணையராக நியமித்துள்ளார்.
இதேவேளை லியின் மகன் அமெரிக்காவிற்கு தகவல்களை கசியவிட்டிருக்கலாம் என்று சில நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகிய பின்னர் வெளியேறும் தளபதியான லீ ஊழல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளப்பட்டுள்ளது.
பிஎல்ஏ மூலோபாய ஆதரவுப் படைத் தளபதி ஜூ கியான்ஷெங்கையும் விசாரணை செய்து வருவதோடு ஏவுகணைப் படையின் ஒன்பது தளங்களின் இருப்பிடங்கள் மற்றும் நோக்கங்களை வெளிப்படுத்த, மூத்த அதிகாரிகள் அமெரிக்காவிற்கு உளவுத்துறையை கசியவிட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
சீன விண்வெளி ஆய்வுத்துறையால் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 255 பக்க அறிக்கை மேற்படி அடிப்படைகள் பற்றிய விவரங்களைக் கொண்டிருந்தது.