ஆளிலில்லா விண்வெளிப் பயணத்துக்கான முதல் சோதனை வாகனப் பணி ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் திட்டமிடப்பட்டுள்ளுத என்று; அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரித்தார்.
சோதனை வாகனம் என்பது ஒற்றை நிலை திரவ ரொக்கெட் என்பதோடு கங்கன்யானின் அனைத்து அமைப்புகளையும் துணை சுற்றுப்பாதை மட்டத்தில் சோதிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
முதல் சோதனை வாகனப் பணிக்கான ‘மிஷன் மிட் ஏர், பாராசூட் சிஸ்டம்’ குழுவைக் கடலுக்குக் கீழே கொண்டு வருவதற்கான செயல்முறைகள் மற்றும் தொகுதியிலிருந்து மீட்டெடுப்பது ஆகியவற்றைச் சரிபார்க்கும் செயற்பாடுகளும் நடைபெறவுள்ளன.
சோதனை வாகனம் (டிவி-டி1) பணி தொடர்பான அனைத்து துணை அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் ‘க்ரூ மாட்யூல் ஒருங்கிணைப்பு முடிந்தது’ என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளதோடு, விண்வெளி நிறுவனம் ஏற்கனவே க்ரூ எஸ்கேப் சிஸ்டம் மற்றும் ‘க்ரூ மாட்யூலின்’ உந்துவிசை அமைப்பை தரையில் சோதனை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.