நடிகர் கமல்ஹாசனின் திரையுலக வாழ்க்கையில் புதிய வசூல் சாதனையைப் படைத்த படம் கடந்த ஆண்டு வெளிவந்த ‘விக்ரம்’. இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கிய அந்தப் படம் வசூலில் தனி சாதனையைப் படைத்தது. சுமார் 500 கோடி வரை வசூலித்ததாகச் சொல்லப்பட்ட அந்தப் படத்தின் வெற்றிக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நடிகர் கமல்ஹாசன் 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள ‘லெக்சஸ்’ கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார். அந்தப் படத்தைத் தயாரித்தது கமல்ஹாசன் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.
ரஜினிகாந்தின் திரையுலக வாழ்க்கையில் மற்றுமொரு பெரிய வெற்றியாக ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ படம் அமைந்துள்ளது. இளம் இயக்குனரான நெல்சன் இயக்கியுள்ள இந்தப் படம் 550 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் வெற்றியை சக்சஸ் பார்ட்டி வைத்து படக்குழுவினர் கொண்டாடினார்கள். அதில் ரஜினிகாந்தும் கலந்து கொண்டார்.
‘விக்ரம்’ வெற்றிக்காக அதன் இயக்குனருக்கு கமல்ஹாசன் விலையுயர்ந்த கார் பரிசளித்தார். ஆனால், அதைவிட வசூலைப் பெற்றதாகச் சொல்லப்படும் ‘ஜெயிலர்’ வெற்றிக்காக அதன் இயக்குனருக்கு ரஜினிகாந்த் ஏன் இன்னும் எந்த ஒரு பரிசையும் வழங்கவில்லை என சமூக வலைத்தளங்களில் சிலர் சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்கள்.

கடந்த வாரம் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, ஜாபர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் இயக்குனர் நெல்சனிடம் ரெடின் கிங்ஸ்லி, ‘வீட்டு வாசல்ல ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்கிறதா கேள்விப்பட்டேன்,’ என்று கேட்க அதற்கு நெல்சன், ‘நடந்தால் சந்தோஷம்,’ என்று பதிலளித்திருந்தார். இயக்குனர் நெல்சனுக்கு அந்த சந்தோஷத்தைக் கொடுக்கப் போவது யார் ?.