”பாடசாலை மாணவிகள் கண்டிப்பாக ஹிஜாப் அணிய வேண்டும் ”என்ற சட்டத்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தோனேஷிய அரசு தளர்த்தியிருந்தது.
இந்நிலையில் லமோங்கன் நகரிலுள்ள ஒரு அரச பாடசாலையில்,அண்மையில் முன் தலையில் முடி தெரியும்படி, ஸ்கார்ஃப் அணியாமல் ஹிஜாப் அணிந்துவந்த 14 மாணவிகளின் முன் தலை முடியை ஆசிரியர் ஒருவர் மழித்துள்ளார்.
இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறித்த பாடசாலைக்கு எதிராகப் பலரும் தமது கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் மன்னிப்பு கோரிய பாடசாலை நிர்வாகம், மனித உரிமை ஆர்வலர்கள் அளித்த அழுத்தத்தால் குறித்த ஆசிரியரைப் பணி இடைநீக்கம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.