இந்தோனேசியாவின் பாலி தீவில் அதி சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், அவை முறையே 5.4 ஆகவும், 5.6 ஆகவும் ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும் சுனாமி ஏற்படும் அபாயமில்லை என்று புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிர் இழப்புக்கள் மற்றும் சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பீதி அடைந்த மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.