இந்தியா தலைமையேற்று நடத்தும் 18வது ஜி20 உச்சி மாநாடு இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானம் பாரத் மண்டபத்தில் ஜி-20 உச்சி மாநாடு இடம்பெற்று வருகின்றது.
குறித்த மாநாட்டில் பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து நேற்று கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா ஆகிய அபிவிருத்தியடைந்த நாடுகள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் ரிஸி சுனக் ஆகியோருக்கிடையில் சிநேகப்பூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது,
இந்தியா மற்றும் பிரித்தானியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தொடர்ந்தும் வர்த்தக ரீதியில் பல்வேறு முன்னேற்றங்களை அடையும் என எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்