இலங்கைக்கான EFF வசதியின் கீழ் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கை தொடர்பான மீளாய்வு குறித்து ஆராய 14 திகதி முதல் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுடன் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
இதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் குழு இன்று முதல் எதிர்வரும் 27 ஆம் திகதிக்கு இடையில் கொழும்புக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக 48 மாத நீட்டிக்கப்பட்ட 3 பில்லியன் டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அங்கீகாரம் வழங்கியது.
நிறைவேற்று சபையின் முடிவின் அடிப்படையில் சுமார் 333 மில்லியன் டொலர் நிதியுதவி முதற்கட்டமாக வழங்கப்பட நிலையில் அதற்கு இணங்கிய உடன்பாடுகள் குறித்து மீளாய்வு செய்யவே இந்தக்குழு இலங்கை வரவுள்ளது.














