தமிழர்கள் உட்பட தனது அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரம் மற்றும் மனித உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்படுவதை இலங்கை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மேலும் அதற்காக வழங்கிய தனது உறுதிமொழிகளை முன்கூட்டியே செயல்படுத்துவதற்கு அர்த்தமுள்ள வகையில் நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச அமைப்புகளுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நெருங்கிய அண்டை நாடாகவும் நண்பராகவும், 2009 முதல் இலங்கையில் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும், மாகாண சபைத் தேர்தலை நடத்தி தமிழர்களுக்கு மரியாதை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை அரசாங்கம் உறுதி செய்யும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.