16ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியக் கிரிக்கெட் அணிக்கு 51 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் மெண்டிஸ் 17 ஓட்டங்களையும் துஷான் ஹேமந்த ஆட்டமிழக்காது 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 6 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 51 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி இந்தியக் கிரிக்கெட் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
ஆசியக் கிண்ணத் தொடரில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பதிவான மிகக்
குறைந்த ஓட்ட எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணி 122 ஓட்டங்களை பெற்றிருந்ததே மோசமான சாதனையாக இருந்தது.
ஆசியக் கிண்ணத் தொடரில் ஒரு அணி பெற்றுக்கொண்ட மிகக்குறைந்த ஓட்ட எண்ணிக்கை
இதுவாகும். இதற்கு முன்னதாக பங்களாதேஷ் அணி பாகிஸ்தான் அணிக்கெதிரா 87 ஓட்டங்களை பெற்றிருந்ததே மிக மோசமான சாதனையாக இருந்தது.
அத்துடன் ஆசியக் கிண்ணத் தொடரில் 6 முறை சம்பியன் அணியான நடப்பு சம்பியன் இலங்கை அணி, முக்கியத் தொடரின் இறுதிப் போட்டியில் மிக மோசமாக விளையாடிய சந்தர்ப்பமும் இதுவாகும்.