இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பொறுப்பில் இருந்து தசுன் சானகவை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேற்று கலந்துரையாடியுள்ளதாகவும், அந்த தீர்மானம் இன்று சானகவிடம் அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இலங்கை அணியின் புதிய தலைமை பதவி குசல் மெண்டிஸுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவுக்கு எதிரான ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி பாரிய தோல்வியைத் தழுவிய நிலையில் தசுன் சானகவின் தலைமைத்துவம் குறித்து பாரிய பிரச்சினை எழுந்திருந்தது.
அப்படியிருந்தும், 39 ஒருநாள் போட்டிகளில் அணிக்கு தலைமை தாங்கிய தசுன் சானக, 23 வெற்றிகளோடு 58.97% வெற்றி சதவீதத்தை பெற்றுக்கொடுத்துள்ளளார்.
2021 இல், இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் பெரிய, கடுமையான தோல்விகளுக்குப் பிறகு, இலங்கை அணையின் தலைமை தசுன் சானகவிடம் ஒப்படைக்கப்பட்டது.
சில காரணங்களால் அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும், சகலதுறை வீரராக உலகக் கிண்ண தொடருக்கான அணியில் அவர் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.