யாழில் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை டெங்கு கட்டுப்பாட்டு வாரமாகப் பிரடனப்படுத்தியுள்தாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” யாழ்.மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பூரண கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் தற்போது ஆரம்பித்திருக்கின்ற வடக்குக் கிழக்கு பருவப்பெயர்ச்சி மழையினால் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இம் மாதம் 25ஆம் திகதி முதல் இரண்டு வாரங்களை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாகப் பிரடனப்படுத்தியுள்ளோம்.
இந்த இரண்டு வாரங்களிலும் பொதுமக்கள் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை துப்பரவு செய்ய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்தார்.