இலங்கைக்கு பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தேவையில்லை என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் மூலம் தமது உரிமைகளுக்காகவும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் சர்வதேசத்தை நாட முடியாத நிலை ஏற்படும்; எனவும்; சுரேஸ் பிரேமசந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் சர்வாதிகாரத் தன்மையை கொண்டு நாட்டு மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படும் வகையிலேயே குறித்த சட்டம் அமையும் எனவே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனவும் சுரேஸ் பிரேமசந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.