யாழ்.நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் ஒவ்வொரு நாளும் தொடர்சியாக காலை 9 மணியளவில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
அந்தவகையில் இன்று தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல் இடம்பெற்றது.இதன்போது மாவீரர் ஒருவரின் தாயார் பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.
இதனையடுத்து நினைவுத் தூபிக்கு அருகில் அடையாள உண்ணாவிரதப் போராட்டமும் இடம்பெற்றது.
குறித்த பகுதியில் பொலிஸார், இராணுவத்தினர், புலனாய்வு பிரிவினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.