நியூசிலாந்தின் மேற்கு கிறிஸ்ட்சர்ச்சில் நகரில் இருந்து 124 கிலோ மீற்றர் தொலைவில் மத்திய தெற்கு தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கமொன்று ஏற்பட்டது.
இந்நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாகவும் இதனை 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் அதிர்ந்துள்ள நிலையில் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.