பாகிஸ்தான் உலக நாடுகளிடம் பணத்துக்காக கையேந்தி நிற்கும் வேளை இந்தியாவோ நிலவை வெற்றிகரமாக அடைந்துவிட்டது” என பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமர்சனம் செய்துள்ளார்.
அண்மையில் லாகூரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் லண்டனில் இருந்து காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” அண்மைக்காலமாக பாகிஸ்தானின் பணவீக்கம் இரட்டை இலக்கமாக அதிகரித்துள்ளது.
பணத்துக்காக பாகிஸ்தான் உலக நாடுகளிடம் கையேந்தி நிற்கும்போது இந்தியாவோ நிலவை அடைந்துவிட்டது.
அத்துடன் ஜி 20 மாநாட்டை யும் வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அத்துடன் ஜி 20 மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
இந்தியாவின் சாதனைகளை ஏன் பாகிஸ்தானால் அடைய முடியவில்லை? இவ்வாறு நவாஸ் ஷெரீப் கேள்வியெழுப்பியுள்ளார்.