திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாண பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தள்ளுபடிசெய்துள்ளது.
திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க கோரி, ஆறு பேர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரினால்; கடந்த 18 ஆம் திகதி நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினரான திலீபன் என்பவரை நினைவு கூறும் செயற்பாடு இலங்கை சோசலிச குடியரசின் வர்த்தமானியின் படி, சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான தேசிய ஒருமைப்பாடுகள் சட்டத்தையும் மீறுவது எனவும், தற்போது நடத்தப்படும் பேரணியை 1979 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைக்கோவைச் சட்டத்தின் கீழ் தடை செய்ய வேண்டும் என்றும் பொலிஸார் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த வழக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி A.A. ஆனந்தராஜா தள்ளுபடி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.