லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று (புதன்கிழமை) முதல் குறைத்துள்ளது.
அதன்படி ஒரு கிலோ சோயாமீட் 45 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 580 ரூபாயாகவும் ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 290 ரூபாயாகவும் விற்கப்படுகின்றது.
அத்தோடு ஒரு கிலோ நெத்தலி 30 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 1,100 ரூபாயாகவும் ஒரு கிலோ பூண்டு 30 ரூபாய் குறைக்கப்பட்டு புதிய விலை 620 ரூபாயாகவும் விற்கப்படுகின்றது.
மேலும் ஒரு கிலோ வெங்காயம் 15 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 195 ரூபாயாக விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.