அமெரிக்காவின் சிகாகோ நகரில், பூட்டிய வீட்டிற்குள், இருந்து ஒரு தம்பதி, அவர்களின் இரண்டு குழந்தைகள், மற்றும் மூன்று நாய்கள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தம்பதியினர் ஒருநாள் முழுவதும் வீட்டில் இருந்து வெளியே வராததாலும், வீடு பூட்டியே கிடந்ததாலும் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சிகாகோ பொலிஸார் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, வீட்டுக்கதவை உடைத்து பார்த்தபோது குறித்த வீட்டில் இருந்த அனைவரும் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் மரணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த தம்பதி தங்களது குழந்தைகள், வளர்த்த நாய்களை சுட்டுக்கொலை செய்து, தாங்களும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது கொலை செய்யப்பட்டனரா? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இச்சம்வம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.