திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுவை சட்டப்பேரவை கூட்டம் இன்று பேரவைத் தலைவர் ஆர்.செல்வம் தலைமையில் ஆரம்பமானது.
புதுச்சேரி முதலமைச்சர்; இரங்கசாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஆர் சிவா, காங்கிரஸ் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் தகுதி இழப்பை தடுத்தல் மற்றும் சேவை வரி தொடர்பான மூன்று சட்ட முன் வரைவுகள் இதன்போது தாக்கல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆராய வேண்டும் என திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், குறித்த சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பேரவைக் கூட்டத்தை திகதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் ஆர் செல்வம் அறிவித்துள்ளார்.