வடக்கு ஈராக்கில் திருமண நிகழ்வொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளது அதேநேரம் 150 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈராக்கின் வடக்கு நினிவே மாகாணத்தில் உள்ள அல்-ஹம்தானியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் இறந்தவர்களில் மணமகனும், மணமகளும் இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் அவர்கள் உயிருடன் இருப்பதாகவும் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஈராக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
திருமண நிகழ்வின் போது பயன்படுத்தப்பட்ட வான வேடிக்கைகள் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக ஈராக்கின் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.