எதிர்வரும் 03 மாதங்களில் இலங்கை பொருளாதார ரீதியாக முன்னுரிமை அளிக்க வேண்டிய 16 விடயங்களை உள்ளடக்கிய மதிப்பீட்டு அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ளது.
வரிக் குறைப்புக்கள் பல தலைகீழாக மாற்றப்பட்டாலும், நிலையான வருவாய் ஈட்டுவதற்கு வரிக் கொள்கையில் பல அடிப்படை மாற்றங்கள் வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.
மேலும் வரி ஏய்ப்பு செய்பவர்கள் மற்றும் இலஞ்சம் பெறும் அதிகாரிகளுக்கு எதிராக கிரிமினல் குற்றச் சாட்டுகளை பதிவு செய்வது உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கவும் வலியறுத்தியுள்ளது.
வரவு செலவு திட்டத்தின் மூலம் மதிப்பிடப்பட்ட வருவாயை சேகரிக்க இயலாமையால் செலவு வரம்புகள் மீறப்படுவதால் வரவு செலவுத்திட்டத்தின் நம்பகத்தன்மை உடைக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அண்மையில் நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டிற்கு விஜயம் செய்ததன் பின்னர், நிதிக் கட்டுப்பாடு மற்றும் முகாமைத்துவத்தில் உள்ள பல பலவீனங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.