அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் மருந்துகளை கொள்வனவு செய்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவிய நிலையில் இந்திய கடன் திட்டத்தின் கீழ் அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் மருந்து கொள்வனவு செய்யப்பட்டது.
எவ்வாறாயினும் சுகாதார தொழிற்சங்கங்கள் மற்றும் பிற சிவில் அமைப்புகள் இது தொடர்பாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் அவசர கொள்வனவை உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்த தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.